செல்போன் வெடித்து இளம்பெண் பரிதாப பலி
சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருத்தபோது, போன் வெடித்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம், கெரியகனி கிராமத்தைச் சேர்ந்தவர் உமா ஓரம். இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது செல்போனை சார்ஜில் போட்டப்படி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த போன் வெடித்து சிதறியது. இதில், உமா காது, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உமாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், உமா ஏற்கனவே இறந்துவிட்டாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உமா பயன்படுத்தியது நோக்கியா நிறுவனத்தின் செல்போன் என்பதால், அந்நிறுவனம் இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும், உமா இறப்பிற்கு தங்கள் நிறுவன செல்போன் தான் காரணமா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என நோக்கி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com