மறைந்த நடராஜனின் உடல் இன்று மாலை விளார் கிராமத்தில் அடக்கம்
மறைந்த நடராஜனின் உடல் இன்று மாலை தஞ்சை மாவட்டம் விளார் கிராமம் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறி உள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர், நேற்று நள்ளிரவு 1.35 மணியளவில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலை நேற்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து, இறுதிச் சடங்கிற்காக அவரது உடலை அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் தஞ்சை மாவட்டத்திற்கு வந்தடைந்தார்.
இந்நிலையில், இன்று நடராஜனின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் நிலையில், மாலை விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சசோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com