ரியல்மீ நார்ஸோ 20 ஸ்மார்ட்போன்: இன்று முதல் விற்பனை ஆரம்பம்

ரியல்மீ நிறுவனத்தின் நார்ஸோ வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மீ நார்ஸோ 20 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று (செப்டம்பர் 28ம் தேதி) முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மீ இணையதளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களான மேற்கு வங்காளம், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, பீஹார் மற்றும் உத்திரபிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களிலும் தொடங்கியுள்ளது.

ரியல்மீ நார்ஸோ 20 சிறப்பம்சங்கள்

சிம் எண்ணிக்கை: இரண்டு (நானோ)தொடுதிரை: 6.5 அங்குலம் எஃப்எச்டி; 720X1600 தரம்; 20:9 விகிதாச்சாரம்முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல் (எஃப்/2.0 லென்ஸ்)பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்இயக்கவேகம்: 4 ஜிபிசேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (256 ஜிபி வரை கூட்டும் வசதி)பிராசஸர்: ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 மின்கலம்: 6000 mAhஎடை: 208 கிராம்

4ஜி வோல்ட், வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், பின்புறம் விரல்ரேகை உணரி (ஃபிங்கர்பிரிண்ட் சென்ஸார்) கொண்டது.

4ஜிபி + 64 ஜிபி ரூ.10,499/- விலையிலும் 4 ஜிபி + 128 ஜிபி ரூ.11,499/- விலையிலும் வாங்கலாம்.

More News >>