அதியமான் ஒளவைக்கு வழங்கிய கனியில் உள்ள ரகசியங்கள்!! வாங்க பார்க்கலாம்..

நெல்லிக்கனியில் ஆயிரம் கணக்கான ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது.இதனைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி பலம் கொண்டு எழுந்து உடலை நெருங்கி வரும் நோய்களையெல்லாம் விரட்டி அடிக்கிறது.இந்த கொரோனா காலம் முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.மனிதனின் உடலில் போதிய எதிர்ப்புச் சக்தி இல்லாததால் தான் கொரோனா உடம்புக்குள் புகுந்து கோரத் தாண்டவம் ஆடுகிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கொரோனாவை அழிக்க வேண்டும் என்றால் உடலில் அதிக அளவிலான நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும்.சரி வாங்க நெல்லிக்கனி எதற்குப் பயன்படுகிறது அதனை எப்படி சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்:-

தினமும் சிறிதளவு நெல்லிக்கனியின் சாற்றையும் பாகற்காய் சாற்றையும் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நம்மை நெருங்கவே நெருங்காது.நெல்லிக்கனி உடலில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைச் சரியான அளவிற்குச் சீர் செய்ய உதவுகின்றது.ஆதலால் இந்த இரண்டு சாற்றையும் தவறாமல் குடிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

சட்னியாக உணவில் சேர்க்கலாம்:-

நெல்லிக்காய்,மிளகாய்,உப்பு,புதினா இலை,இஞ்சி,பூண்டு ஆகியவை அரைத்து சட்னியாகச் சமைத்து தினமும் டிபனுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் நலம் ஆரோக்கியம் பெரும்.உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் மேன்மேலும் வளரும்.அடுத்த டிஷ் யாவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.நெல்லிக்காயில் ஊறுகாய் செய்தால் எல்லா விதமான உணவு வகைக்கும் தொட்டுச் சாப்பிட்டால் உணவின் சுவையும் அள்ளும்..உடல் ஆரோக்கியமும் வளரும்....உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள் ஊறுகாயில் எண்ணெய் விடாமல் சேமித்துச் சாப்பிடலாம்.

முக்கிய குறிப்பு:-

சிலரின் உடலுக்கு நெல்லிக்காய் பக்கவிளைவுகளை உண்டாக்கும்.உடம்பில் இரத்த அளவு குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காயை அறவே தவிர்க்க வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் தங்களது மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து முடிவு எடுங்கள்.

More News >>