நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் பால் பருகலாமா?

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்ப் பாதிப்புள்ளவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் பரிசோதித்து அதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காவிட்டால் அது வேறு பல உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது எளிதானதா?

இரத்த சர்க்கரையின் அளவும் பாலும்

அமெரிக்க ஆய்விதழ் ஒன்றில் 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில் காலை உணவுடன் பால் அருந்துவது அன்றைய நாள் முழுவதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை குறைக்க உதவுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.காலையில் தானிய உணவுகளைச் சாப்பிடுவோர் பால் அருந்தினால் காலை உணவுக்குப் பின் எடுக்கப்படும் இரத்த பரிசோதனையில் (postprandial blood glucose) சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. காலை உணவுக்குப் பின் நீர் மட்டும் அருந்துபவர்களைக் காட்டிலும் பாலும் சேர்த்துப் பருகுவோருக்கே இந்த வித்தியாசம் ஏற்படுகிறது.

அதிக புரதம் நிறைந்த பால் அருந்தினால் மட்டுமே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. அதிக புரதம் நிறைந்த பாலை பருகினால் அது பசியைக் குறைக்கிறது. அதனால் சாப்பிடும் உணவின் அளவும் குறைகிறது. இப்படி தொடர்ச்சியான செயல்பாட்டின் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாகக் குறைகிறது.

காலையில் அதிக கார்போஹைடிரேடு உள்ள உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு அதிக புரதம் அடங்கிய பாலை பருகுவது செரிமானமாகும் வேகத்தைக் குறைத்து நாள் முழுவதும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாடாகப் பேணுவதற்கு உதவுகிறது.காலை உணவுடன் அதிக புரதம் கொண்ட பால் பருகுவது இரண்டாம் வகை நீரிழிவு (இன்சுலின் சுரப்பு குறைவதால் வரும் பாதிப்பு) கொண்டோருக்கு நல்ல பலனை அளிக்கிறது.

More News >>