விசாரணை வளையத்தில் மேரி கோமின் நிறுவனம்!
பிரபல குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோம் நடத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மீது விசாரணைக் கமிஷன் மேற்பார்வை செய்யவுள்ளது.
வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்நிய செலாவணி சட்டப்படி மேரி கோம் தன்னார்வு நிறுவனத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் தகவலை இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி பிரிவின்கீழ் நாஸ்காம் மற்றும் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பில் விசாரணை நடந்திருப்பதாகவும், ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், மேரி கோம் பவுண்டேஷன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தன்னார்வு நிறுவனங்களிடம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் தன்னார்வ அமைப்புடன் சேர்த்து மொத்தம் 21 நிறுவனங்களுக்கு அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com