பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
சின்ன வெங்காயத்தில் எந்த உணவு வகை செய்தாலும் அதனின் சுவை நம் நாக்கை கட்டி போட்டுவிடும்.எல்லோரும் கேள்விப் பட்டு இருப்பீர்கள் சின்ன வெங்காயத்தில் சாம்பார் செய்தால் மனம் எட்டு ஊருக்கு மணக்கும் என்று.சின்ன வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேன்மை பெரும்.சரி சின்ன வெங்காயத்தை வைத்து எப்படி சட்னி செய்வது என்பதைப் பார்ப்போம்..
தேவையான பொருள்கள்:-
சின்ன வெங்காயம்-1 கப் பூண்டு-6புளி-தேவையான அளவு வரமிளகாய்-4நல்லெண்ணெய்-3 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு கடுகு-சிறிதளவு கறிவேப்பிலை-சிறிது பெருங்காயத்தூள்-சிறிதளவு
செய்முறை:-
முதலில் சட்னிக்குத் தேவையான சின்ன வெங்காயம்,பூண்டு,புளி,வர மிளகாய், தேவையான உப்பு ஆகியவை சேர்த்து ஒன்றாக மிக்சியில் தண்ணீர் விட்டு சட்னி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை வைத்து அதில் அரைத்த கலவையைக் கொட்டி பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.வேறொரு வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்த பிறகு சட்னியில் சேர்த்தால் சுவையான சின்ன வெங்காயச் சட்னி ரெடி..