உலகநாயகன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை கசிந்ததா??ஆரவாரத்தில் இருக்கும் ரசிகர்கள்!!
இந்தியன்- 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாகத் தகவல் கிட்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பத்மஸ்ரீ கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் ரகுல்பிரித் சிங் உள்ளிட்டோர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் இந்தியன்- 2 தயாராகி வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் இந்தியன்- 2 திரைப்படத்தின் கதை வெளியாகியுள்ளது என்ற செய்தி மக்கள் இடையே ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.வெளியான கதையில் ஒரு இளைஞன் யூடூப் சேனல் நடத்திவருகிறார்.
அதில் ஊழல் செய்கின்ற அரசியல்வாதிகளைப் பற்றி மக்களுக்கு அறியும்படி எடுத்துரைக்கிறார்.அப்பொழுது இளைஞனுக்கு அரசியல்வாதிகளால் ஆபத்து ஏற்படுகிறதை அறிந்த சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியன் தாத்தா இந்தியா வருகைதந்து அவ்விளைஞனுக்குப் பக்க பலமாய் இருக்கின்றார்.இவர்களுக்கு நேர்மையான அரசியல் வாதியாக உதவுகிறார் கமல்.என்பது தான் அந்த கதை.ஆனால் இதுதான் இத்திரைப்படத்தின் கதையா இல்லை வதந்தியா என்பதைப் படக்குழு எந்தவித தகவலும்,எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.