39 இந்தியர்கள் படுகொலை - பிணைக் கைதிகளாக வைத்திருந்த ஐ.எஸ். இயக்கத்தினர்
இராக்கின் மோசூல் நகரில்பயங்கரவாதிகளால் கடத்தி பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்களும் கொல்லப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், பீகார், மேற்குவங்கம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 39 இந்தியர்களை, கடந்த 2014-ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்தினர். இராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்த39 பேரும், மோசூல் நகரை விட்டுவெளியேற முயன்றபோது, சிறைப் பிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்களும் மரணமடைந்து விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர்சுஷ்மா சுவராஜ் செவ்வாய்க்கிழமையன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இறந்தவர்களின் உடல்கள் இராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது; சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ.காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது; ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவிகிதம் ஒத்துள்ளது.
இதனை உறுதி செய்த பிறகே அவர் களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; அமைச்சர் வி.கே. சிங், இராக்கிற்கு சென்று கொல்லப்பட்ட இந்தியர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்வார்” என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com