உதவி செய்ததை டிவிட்டரில் சொன்னது ஏன்? இளம் நடிகர் விளக்கம்..
வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல். விஜய காந்த், சரத்குமார் போலப் பல நடிகர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள்.நடிப்பில் மட்டுமல்ல நற்பணிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று இவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.அதை எத்தனை இளம் ஹீரோக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். நடிகர் ஹரீஷ் கல்யாண் அந்த சிறிய எண்ணிக்கையில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து உதவி வரும் ஸ்ரீ மாதாபுற்றுநோய் மருத்துவமனைக்கு நிதியுதவி அளித்து அந்த புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில்,புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களை அவர்கள் இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீ மாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜய ஸ்ரீ அவர்களுக்குப் பாராட்டுக்கள். அவரின் 8 ஆண்டுக்கால சேவைக்கு என் சிறிய பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
உதவி செய்ததை ஷ்ரிஷ் கல்யாண் தனது சமூக வலைத் தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டது பப்ளிசிட்டிக்காகவா என்று யாரும் கேட்பதற்குள் அதற்குப் பதில் அளித்துள்ள ஹரீஷ்,புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவியதை நானே வெளியிட்டதற்குக் காரணம் அதைப் பார்த்து மற்றவர்களும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத்தான். மேலும் அது பற்றிய விழிப்புணர்வாக இது அமையும்எனக் குறிப்பிட்டுள்ளார்.நடிகர் ஹரிஷ் கல்யாண் கமலின் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றுப் புகழ் பெற்றார். பியார் பிரேம் காதல், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் கசட தபற மற்றும் பெல்லி சூலு தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.