சர்ச்சையில் குளிர்காயும் மீரா மிதுன்இவரின் அடுத்த டார்கெட் கல்யாணம் செய்து கொள்வதா??
தமிழ் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் மீரா மிதுன்.தானா சேர்ந்த கூட்டத்தில் சிறிய கண்ணோட்டத்தில் நடித்து உள்ளார்.அதன் பிறகு பீக் பாஸ் 3 என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார்.பீக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் மும்பையில் குடிபெயர்ந்தார்.நாளுக்கு நாள் எதாவது புது பிரச்சனையை கிளப்ப வில்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது போல…தற்பொழுது தமிழ் திரையுலகில் முன்னனி கதாநாயகனான சூர்யாவை கூறி வைத்தார்.ஆனால் சூர்யா அவர்கள் மீரா மிதுன் விரித்த வலையில் சிக்க வில்லை. சூர்யாவை தொடர்ந்து த்ரிஷா,ஐஷ்வர்யா ராஜேஷ் என பலரையும் வம்புக்கு இழுத்தார்.ஆனால் யாரும் இவரை கண்டுகொள்ளவில்லை.
தற்பொழுது அவரது இன்ஸ்டாப்பக்கதில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு couple goals என்று பெயரும் வைத்துள்ளார்.ஆனால் போட்டோவில் அவர் கூட இருக்கும் ஆண் மீரா மிதுனை விட சிறியவராக இருக்க கூடும் என்னும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் மக்கள் ஒரு சிறிய பையனின் வாழ்க்கையை கெடுத்துவிடாதே போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் மீரா மிதுன் கடந்த ஜூன் மாதம் எனக்கு நிச்சியதார்த்தம் முடிந்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தனக்கு திருமணம் என்றும் மீடியாவில் கூறிவுள்ளார்.ஆனால் மாப்பிள்ளை யார்?அவர் என்ன வேலை செய்கிறார் ?போன்ற தகவல்களை வெளியே சொல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.இந்நிலையில் மீரா மிதுன் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தியுள்ளார்.