சசிகலாவுக்காக கையெழுத்து போட அதிமுக எம்.பி.க்கள் ஒருவர் கூட இல்லையா? - சீமான் வேதனை
சசிகலா பரோலில் வர, அதிமுக எம்.பி.க்களில் ஒருவர் கூட கையெழுத்து போடாதது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியருமான ம.நடரான், கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் நடராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
ம.நடராஜனின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைத் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நடராஜன் உயிருடன் இருக்கும் போது சசிகலா பரோலில் வர, அதிமுக எம்.பி.க்களில் ஒருவர் கூட கையெழுத்து போடாதது தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நடராஜன் மறைவுக்குக் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல்” என்று சீமான் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com