சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை ! தவறினால் 2% அபராதம் !
சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் 2 சதவீதம் அபராத தொகை செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு , முதல் அரையாண்டின் ஏப்ரல் 1 முதல் 15 ம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டில் அக்டோபர் 1 முதல் 15 ம் தேதிக்குள்ளும் சொத்து வரி செலுத்தப்படமால் இருந்தால் நிகர சொத்து வரியுடன் ( கல்வி வரி , நூலகத்தீர்வை வயக தவிர்த்து ) கூடுதலாக ஆண்டுக்கு 2% அளவில் தனிவட்டியுடன் அபராத தொகை விதிக்கப்படும்.
அதே போல் சரியான காலகட்டத்துக்குள் வரி செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை, அதிகபட்சமாக 5000 வரை வழங்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.