ஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி: ரஷீத் கானுக்கு மேன் ஆஃப் த மேட்ச்...

செவ்வாயன்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இத்தொடரில் முதன்முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 45 ரன்களும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 53 ரன்களும், கேன் வில்லியம்சன் 41 ரன்களும் எடுத்தனர். இருபது ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா, வார்னர், மணீஷ் பாண்டே ஆகியோரை வீழ்த்தினார். பேர்ஸ்டோவை ரபாடா வீழ்த்தினார். காயத்திற்குப் பிறகு டெல்லி அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

இரண்டாவதாகப் பேட் செய்யக் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரித்வி ஷா 2 ரன் எடுத்திருந்த நிலையில் புவனேஷ்குமார் அவரை வீழ்த்தினார். டெல்லி அணியின் நம்பிக்கையாயிருந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களுக்கும், தவான் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரை மட்டுமல்ல, மற்றொரு சிறந்த வீரரான ரிஷப் பண்ட் விக்கெட்டையும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் ரஷீத் கான் வீழ்த்தினார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களின் கட்டுப்பாட்டால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத்கான் மேன் ஆஃப் த மேட்சாக தெரிவு செய்யப்பட்டார்.இன்று துபாயில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை எதிர்கொள்ள இருக்கிறது.

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.

More News >>