53 வயதில் பட்டப்படிப்பின் இறுதி தேர்வை எழுதி அசத்திய நடிகை.. வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்

தனது 53 ஆம் வயதில் கல்வியில் நாட்டம் கொண்டு பட்டப்படிப்பின் இறுதி தேர்வை எழுதி முடித்துள்ளார் நடிகை ஹேமா.

தெலுங்கு திரையுலகில் புகழ்,செல்வம், அனுபவம் ஆகியவை வாய்ந்தவர் நடிகை ஹேமா அவர்கள்.இவரது இயற்பெயர் கிருஷ்ணவேணி.இவர் 250 திரைப்படத்திற்கு மேல் நகைசுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தமிழ் திரைப்படத்திலும் ஏ.எல்.விஜய் இயற்றிய தேவி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் குடும்ப கஷ்டத்திற்காக சிறு வயதிலே சினிமாவை நோக்கி பயணிக்க ஆரம்பித்ததால் அவரது கல்வியை பாதியில் நிறுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.ஆனால் இவரது மனதில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்ததால் தனது 53 ஆம் வயதிலும் துணிச்சலோடு பட்டப்படிப்பின் இறுதி தேர்வை எழுதி தனது கனவை நிஜமாக்கியுள்ளார் கல்வி கற்பதற்கு வயது வரம்பு தடை இல்லை என்பதை முறியடித்து தனது ஆசையை நிறைவேற்றி உள்ளார் ஹேமா.இதனால் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து உள்ளார். ஹேமாவை ரசிகர்கள் ,சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளுகிறார்கள்...

More News >>