இதய துடிப்பு, மாதவிடாய் சுற்றை கண்காணிக்கும் ஸ்மார்ட் பேன்ட்: நாளை முதல் விற்பனை..!

ஸோமிநிறுவனத்தின் மி ஸ்மார்ட் பேன்ட் 5, அக்டோபர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், உள்ளரங்கில் ஓடுதல், நீந்துதல், யோகாசனம் உள்ளிட்ட 11 தொழில்முறை விளையாட்டுகளுக்கான மி ஸ்மார்ட் பேன்ட் 5 அறிமுகமாகிறது.

மி ஸ்மார்ட் பேன்ட், இதயத்துடிப்பை எப்போதும் கண்காணிக்கக்கூடியது. ஓய்வாக இருக்கும்போதான இதயத் துடிப்பு விகிதம், தூங்கும் நேரம், ஆழ்ந்த மற்றும் இயல்பான உறக்கம், கண் அசைவு (REM-rapid eye movement), மன அழுத்தம் இவற்றையும் கண்காணிக்கலாம். மூச்சுப்பயிற்சி வழிகாட்டல், நடக்கும்போது எடுத்து வைக்கும் அடிகளின் எண்ணிக்கை, செலவழியும் கலோரி அளவு இவற்றையும் மி ஸ்மார்ட்பேன்ட் மூலம் அறிந்து கொள்ள முடியும். பெண்கள், மாதவிடாய் சுற்று, கருமுட்டை நிலைகள் ஆகியவற்றையும் கண்காணிக்கலாம்.

அணிந்திருப்பவரின் பாலினம், வயது, இதயத் துடிப்பு விகிதம் உள்ளிட்ட அளவீடுகளின் அடிப்படையில் பிஏஐ ஸ்கோர் எனப்படும் தனிநபர் உடற்செயல் நுண்ணறிவு அளவீட்டையும் இது வழங்கும். பிஏஐ ஸ்கோர் ஆரோக்கியமாக இருப்பதற்கு எவ்வளவு துடிப்பாக இருக்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ள உதவும்.இதன் 1.1 அங்குல தொடுதிரையானது 126X294 பிக்ஸல் தரம் கொண்டது. இதற்கு முந்தைய மி ஸ்மார்ட் பேன்ட் 4ஐ விட இதன் திரையின் அளவு ஏறக்குறைய 20 சதவீதம் அதிகமாகும்.

More News >>