கணவர் மீது பலாத்கார புகார் கொடுத்த கவர்ச்சி நடிகை திடீர் பல்டி., காலில் விழாத குறையாக கெஞ்சியதால் மன்னிப்பாம்..
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதே சமயம் இணைய தளத்தில் கவர்ச்சி படங்கள், டாப்லெஸ் மற்றும் சில சமயம் நிர்வாண படங்கள் வீடியோக்கள் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனது நீண்ட நாள் பாய்ஃபிரண்ட் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். சில நாள் கழித்து இருவரும் தேனிலவுக்காக கோவா சென்று தங்கினர்.
அப்போது கணவர் மீது போலீசில் பாலியல் புகார் அளித்தார் பூனம். தனது சம்மதம் இல்லாமல் என்னை பலவந்த மாக பாலியல் பலாத்காரம் செய்தார் சாம் அத்துடன் என்னை அடித்து சித்ரவதை செய்தார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் சாம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் கணவர் மீது கொடுத்த புகாரை நடிகை பூனம் திடீரென்று வாபஸ் பெற்றார். இருவருக்குள்ளும் சமாதானம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் இவர்கள் இப்படி செய்த ஒரு நாடகம்தான். இந்தியில் நடக்கும் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்பதற்காகவே இப்படியொரு பப்ளிசிட்டி ஸ்டன்ட்டை பூனம் செய்தார் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பூனம் கூறும் போது, எங்களுக்குள் பிரச்சனை எழுந்தது உண்மைதான். நான் சாம் மீது போலீசில் புகார் கொடுத்த பிறகு என்னிடம் வந்து கதறி அழுதார். நான் தவறு செய்து விட்டேன். இனிமேல் இப்படியொரு தவறு செய்ய மாட்டேன் என்ன நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதாகக் கெஞ்சினார்.
குடும்பத்துக்குள் சண்டை வருவது சகஜம் தான் நான் சாமை மன்னித்து விட்டேன். இனி இருவரும் சேர்ந்து வாழ்வோம். பிக்பாஸ் ஷோ வில் பங்கேற்பதற்காக இப்படி ஸ்டன்ட் அடித்தீர்களா என்கிறார்கள். பிக்பாஸ் ஷோவில் நான் பங்கேற்கவில்லை என்றார்.கணவர் சாம், தனது காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டதால் போனால் போகட்டும் என்று பூனம் மன்னித்துவிட்டார் என்ற ரேஞ்சிக்கு பில்டப் கொடுத்ததை கண்டு, என்ன கொடுமை சார் இது.. என்று நடிகையை நெட்டிஸ்ன்கள் நக்கலடித்து வருகின்றனர்.