எச்1பி விசா விண்ணப்பம் ஏப்ரல் 2ம் தேதி முதல் விநியோகம்

அமெரிக்கா செல்வதற்கான எச்1பி விசா விண்ணப்பம் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பல நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணிபுரிய செல்பவர்களுக்காகவே எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பணிபுரிவதற்காக மட்டுமே இதைக்கொண்டு அங்கு நிரந்தரமாக தங்கவோ, குடிப்பெயரவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பணிக்காலம் முடிந்ததும் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறலாம். அதுவரையில், அந்த விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினருக்கு மிக முக்கியமாக கருதப்படும் எச்1பி விசா விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “எச்1பி விசா விண்ணப்பம் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. அதேநேரத்தில் எச்1பி விசாவுக்கான பிரீமியம் விண்ணப்பம் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 2019ம் ஆண்டுக்கான எச்1பி விசா மனு தாக்கல் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கும்” என தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>