தமிழகத்தில் சினிமா திரையரங்குகளை திறக்க அக்.31 வரை தடை நீடிப்பு..
கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் சினிமா தியேட்டர்கள் அடைக்கப்பட்டன. அத்துடன் அத்தனை வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. 5 மாதத்துக்குப் பிறகு வணிக நிறுவனங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் வர்த்தக மால்கள் திறந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் சினிமா தியேடர்கள் திறப்பு மட்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் அரசு தரப்பில் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருந்த படங்கள் மெல்ல ஒடிடி தளத்தில் வெளிவரத் தொடங்கியது. சூர்யாவின் சூரரைப்போற்று படமும் தியேட்டர் திறப்புக்காகக் காத்திருந்து கடைசியில் ஒடிடி தள ரிலீசுக்கு விற்கப்பட்டது. அடுத்து ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படமும் ஒடிடிக்கு விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் நாட்டில் தியேட்டர்களில் புதிய படங்களைக் காண ரசிகர்கள் இன்னும் காத்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு கொரோனா ஊரடங்கை வரும் அக்டோபர் அக்டோபர் 31 வரை நீட்டித்தது. தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சமூக அரங்குகள், கடற்கரைகள், மிருகக் காட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின் கீழ், கட்டாயமாக முகமூடிகளை அணிவது, சமூக இடைவெளி தூரம் பராமரித்தல் போன்றவை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சினிமா ஷூட்டிங் 100 நபர்களைக் கொண்ட குழுவாக தொடரலாம். படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் தொடரும்.