ரூ.824 கோடி மோசடி - கனிஷ்க் நகைக் கடை உரிமையாளர் கைது

சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் தங்க நகை கடை உரிமையாளர் வங்களில் ரூ.824.15 கோடி முறைகேடு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க நகை தயாரிப்பு நிறுவனமான கனிஷ்க் சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 .15 கோடி கடன் பெற்றுள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

முதன் முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியே இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த ஆண்டு ஜனவரி அனைத்து வங்கிகளும் முறைகேடு செய்துள்ளதாக புகார் அளித்துள்ளன. இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிபிஐ இணை இயக்குனருக்கு 16 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று பூபேஷ் குமார் ஜெயினை மத்திய கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ரூ.20கோடி ஜிஎஸ்டி வரித்தொகையும் கட்டவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>