தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை சென்னையில் அமைகிறது..!
இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் கிளைகள் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் சென்னையிலும், மணிப்பூரில் இம்பால் ம, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி ஆகிய மூன்று இடங்களில் இந்தக் கிளைகள் துவக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த மூன்று கிளைகளும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தங்களுக்கென தனி அலுவலகங்களைப் பெற்றிருக்கும். ஒவ்வொன்றிலும் குறைந்தது 30 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட உள்ளது.
இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் தேசிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பு தான் தேசிய புலானாய்வு முகமை பல மாநிலங்களின் வழியாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திருக்காமல் நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பிற்கு போதிய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அமைப்பை உருவாக்கிடத் தேசிய புலனாய்வு முகமை மசோதா அதே ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.தேசிய புலனாய்வு முகமைக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் வகையில், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுவரை தீவிரவாத மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட வழக்குகளை மட்டுமே இந்த அமைப்பு விசாரித்து வந்தது. இனி ஆட்கடத்தல், கள்ள நோட்டு தொடர்பான குற்றங்கள், இணைய வழி தீவிரவாதம், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட பல குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்பிற்கு வழங்க இந்த மசோதா வழிவகை செய்தது