காந்தி ஜெயந்தியன்று பஞ்சாபில் விவசாயிகள் பேரணி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானாவில் காந்தி ஜெயந்தியன்று விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். மத்திய பா. ஜ. க. அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் மட்டும் இந்த சட்டங்களுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது.

இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் பேரணி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இரு மாநில காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்த பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இது குறித்து ஆகக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த இந்த புதிய வேளாண் சட்டங்களை ராகுல் காந்தி பல இடங்களில் கடுமையாகச் சாடி வருகிறார். இவை விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் இரும்பு ஆயுதம் என அவர் பேசியுள்ளார்.

சிலநாட்களுக்கு முன் பீகார், பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகளிடம் இந்த வேளாண் மசோதாக்கள் குறித்து அவர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய ராகுல் காந்தி ஜிஎஸ்டி வரி, ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் இந்த மூன்று சட்டங்களுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், புதிய வேளாண் சட்டம் உங்கள் இதயத்தை நேரடியாகக் கத்தியால் குத்துகிறது. எனவேதான் . இதை எதிர்க்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக உள்ளேன். இது விவசாயிகளுக்காக அல்ல, இந்தியாவின் எதிர்காலத்திற்காக என்று அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் விவசாயிகள் நடத்தட்டும் பேரணியில் கலந்து கொள்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>