தோனியின் பல்கலைகழகத்தில் படிக்கிறேன் - அடக்கி வாசிக்கும் தினேஷ் கார்த்திக்
டோனி முதலிடத்தில் இருக்கும் பல்கலைகழகத்தில் நான் படித்து வருகிறேன் என்று ஒரே நாள் போட்டியில் புகழடைந்த தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான நிதாஷ் கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச வீரர்களின் கோப்பைக் கனவை சுக்குநூறாக்கியவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். அந்த போட்டியில், வெறும் எட்டு பந்துகளில் 29 ரன்கள் குவித்து இந்திய அணி கோப்பையை கைப்பற்ற உதவினார். இதனால், ரசிகர்கள் தோனியின் இடத்தை தினேஷ் கார்த்திக் பிடித்துள்ளதாக புகழ்ந்து வருகிறார்.
இது குறித்து கூறியுள்ள தினேஷ் கார்த்திக், “தோனி முதலிடத்தில் இருக்கும் பல்கலைகழகத்தில் நான் படித்து வருகிறேன். ஆகையால், தோனியுடன் ஒப்பிடுவது நியாயமானது கிடையாது. நான் எனது பயணத்தை தொடங்கி உள்ளேன். அந்த போட்டி நம்பிக்கைக்கான புதிய சிறகை கொடுத்துள்ளது.
தோனியின் பயணமோ முற்றிலும் வேறானது. நான் எப்போழுதும் அவரிடம் இருந்து கற்று கொண்டிருக்கிறேன். அவரை எப்பொழுது கண்டு வந்திருக்கிறேன். இன்றளவில் அவர் இளைஞர்களுக்கு உதவிபுரிந்து வருகிறார். இளைஞர்கள் மேலும், மேலும் அவரிடம் இருந்து கற்று வருகின்றனர்.
கிரிக்கெட் வாழ்க்கையில் எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகவே நான் இதை கருதுகிறேன். அது தான் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க எனக்கு உதவியது. இவ்வளவு ஆண்டுகளில் நான் செய்த அனைத்து நல்ல விசயங்களும் பந்து தான் கூடுதலாக இரண்டு மில்லிமீட்டர் கடக்க உதவியது. இத்தனை ஆண்டுகள் களித்து எனக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com