எம் பேரு மீனா குமாரி பாடல் கவர்ச்சி நடிகை மீது கார் டிரைவர் திடீர் புகார்..
சியான் விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில், எம் பேரு மீனா குமாரி பாடலுக்கு நடனம் ஆடியவர் முமைத்கான். அதே போல் விஜய் நடித்த போக்கிரி, கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.சமீபத்தில் முமைத் வாடகை கார் ஒன்றை புக் செய்துகொண்டு கோவா சென்றார். அந்த காருக்கு வாடகை தரவில்லை என்று கார் டிரைவர் புகார் அளித்திருக்கிறார்.
இதுபற்றி ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ராகவா ராஜ் என்பவர் கூறும்போது, கோவா செல்ல வேண்டும் என்று என் காரை வாடகைக்கு எடுத்தார். அவரை கோவா அழைத்துச் சென்றேன். அங்கு 8 நாட்கள் தங்கினார். பிறகு ஐதாராபாத் திரும்ப அழைத்து வந்தேன். பாக்கி பணம் ரூ 15 ஆயிரம் தருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தராமல் ஏமாற்றினார். அவர் கோவா வந்ததற்கு ஆதாரமாக என்னிடம் டோல் கேட் பில்கள் மற்றும் அவருடன் செல்பி எடுத்து கொண்ட படங்கள் மற்றும் தேவையான ஆதாரங்கள் உள்ளன. இதுபோல் மற்ற ஓட்டுனர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று இதனை வெளிபடுத்துகிறேன் என்றார்.
இதுபற்றி நடிகை முமைத்கான் பதில் எதுவும் சொல்லவில்லை.