தமிழக அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி !

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் அனைத்து வகுப்பினரையும் சார்ந்த ஆண், பெண் ஆகிய இருபாலரிடமிருந்தும் 9 வார கால இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கிறது.இது தவிர பயிற்சிகாலத்தில் போக்குவரத்து மற்றும் உணவு செலவீனங்களை அரசு அனுமதித்துள்ள வகையில் வழங்கப்படும். இப்பயிற்சியை தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: *கல்வி தகுதி தேவையில்லை.*பயிற்சி துவங்கும் நாளான்று 20 வயதிற்கு மேல் இருக்கவேண்டும்.*பயிற்சி துவங்கும் போது இலகுரக வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு முடிந்திருக்க வேண்டும்.* பிஎஸ்வி பேட்ஜ் பதியப்பட்டு இருக்க வேண்டும்.* குறைந்தபட்சம் 155 செ.மீ உயரமும், 40 கிலோ எடையும் இருக்க வேண்டும்.*கண்கண்ணாடி அணியாமல், கண்பார்வை திறன் std-I (6/6) இருத்தல் வேண்டும்.

பயிற்சி நடைபெறும் மையங்கள்:கும்மிடிப்பூண்டி, திருச்சி, விழுப்புரம், வேலூர், கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, தருமபுரி, ஈரோடு, நாகர்கோவில், திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, பொள்ளாச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.

* சாதி சான்றிதழ்*இலகுரக வாகன உரிமம் பொதுப்பணி வில்லையுடன் ( பேட்ஜ் ) *குடும்ப அட்டை நகல்*ஆதார் அட்டை நகல்

இப்பயிற்சியில் சேர் விரும்புவோர் www.irtchennai.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கும் செய்து, பயிற்சி பெற விரும்பும் மையத்தின் பெயரை தெளிவாக குறிப்பிட்டு " கூடுதல் இயக்குநர் (கவாஓப), சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர் பயிற்சி பிரிவு, கும்மிடிப்பூண்டி -601201, திருவள்ளூர் மாவட்டம் " என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும். தேவைக்கேற்றவாறு விண்ணப்பங்கள் சரிபார்த்து பரிசீலிக்கப்படும்.

More News >>