சிவாஜி 92வது பிறந்த தினம்: துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.. ராம்குமார், விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் குடும்பத்தினர் பங்கேற்பு..
செவாலியே, நடிகர் திலகம் சிவாஜியின் 92வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி சென்னை அடையாறு பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மணிமண்டபத்திற்குள் சிவாஜி சிலைக்கு கீழே சிவாஜியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணி அளவில் சிவாஜி மணிமண்டபத்துக்கு வந்து சிவாஜி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் ஜெயகுமார், ம.பா.பாண்டியராஜன், வளர்மதி ஆகியோரும் சிவாஜி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாகவே மணிமண்டபத்துக்கு சிவாஜி மூத்த மகன் ராம்குமார். இளைய மகன் விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் சிவாஜி குடும்பத்தினர். பிஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் வந்திருந்து துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை வரவேற்றனர்.கொரோனா காலகட்ட மாக இருந்த போதும் ஏராளமான சிவாஜி ரசிகர்கள் மணிமண்டபத்துக்கு வந்து குவிந்திருந்தனர். அனைவருமே முககவசம் அணிந்திருந்தனர். பின்னர் ரசிகர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து சிவாஜி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.