கொரானாவாவது.. ஒன்னாவது .. தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களைக் கட்டிப்போட்டு 250 பவுன் நகை கொள்ளை...!

சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் நூருல் யாக்கூப் , நேற்று மாலை இவர் வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்து அனைவரையும் கட்டிப் போட்டனர். பின்னர், வீட்டிலிருந்த 95 ஆயிரம் ரூபாய், 250 பவுன் தங்க நகைகள் மற்றும் காரை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த சில நாட்களாக யாக்கூபின் வீட்டில் தங்கியிருந்து வெளியேறிய அவரது உறவினர் மொய்தீன் என்பவரது கை வரிசையாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மொய்தீன் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தைச் சேர்ந்தவர்.இந்த கொள்ளை சம்பவத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்.யாகூப் குடும்பத்தில் இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருந்தனர். கொள்ளையர் கள் அதைக்கூட லட்சியம் செய்யாமல் கொள்ளை தான் முக்கியம் கொரானாவாவது ஒன்னாவது என்று சொல்லி அவர்களையும் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

More News >>