நொய்டாவில் ராகுல் காந்தி கைது..!
உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது ராகுல்காந்தி கைது செய்யப்பட்டா்ர்.
உத்தரப்பிரதேசத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்திக்கக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். ஆனால் அவர்களை அந்த ஊருக்குள் அவர்களை நுழைய விடாமல் எல்லையிலேயே அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வாகனத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ராகுல்காந்தியும், பிரியங்காவும் நடந்தே ஹாத்ராஸ் கிராமத்திற்குச் சென்றனர்.ராகுலின் பின்னால் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர் போலீசார் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்திக்கச் சென்ற அமைதியான வழியில் என்னைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் என்ன என்று ராகுல்காந்தி ஆவேசப்பட்டார்.
ஆனால் போலீசாரோ 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கைது செய்வதாக காவல்துறை தெரிவித்தனர். தனியாக செல்லும் என்னை எந்த அடிப்படையில் தடுத்து நிறுத்துகிறீர்கள்? என்று போலீசாரிடம் ராகுல்காந்தி வாக்குவாதம் செய்தார். ஆனால் தடை உத்தரவை மீறி வந்ததால் அனுமதிக்கவில்லை என்று சொல்லிய போலீசார் அவரை கைது செய்தனர்.