போதை விவகாரத்தில் கைதான நடிகைகள் செல்போனில் ஆபாச வீடியோ, படங்கள்.. போலீஸ் அதிர்ச்சி மற்றொரு வழக்கில் கைதா?
ஒட்டு மொத்தமாக சினிமா துறைக்கே கெட்ட காலம்போல் இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் சினிமாவை முடக்கிப் போட்டிருக்கிறது. பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள் எஸ்பி.பாலசுப்ரமணியம் போன்ற பிரபலங்கள் சிலர் உயிரிழந்தனர். இதுவொருபுறம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. மறுபுறம் பிரபல நடிகைகள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
நிமிர்ந்து நில் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த கன்னட நடிகை ராகினி திவேதி, நடிகை சஞ்சனா கல்ராணி இருவரும் போதை மருந்து விவகாரத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ராகினி, சஞ்சனா இருவரும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர் ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் இருவரின் செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றி அதில் உள்ள ரகசியத் தகவல்களைக் கண்டுபிடிக்க ஃபொரன்சிக் துறைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அந்த போன்களை ஆராய்ந்து அதில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை மீட்டு வருகின்றனர். இரண்டு செல்போன்களிலும் ஆபாசப் படங்களும் நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி படங்களும் சில முக்கிய தகவல்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
போதைப் பொருள் விவகாரத்தை ஆராயப்போக அதில் தற்போது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் கிடைத்திருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தற்போது இருவர் மீதும் ஆபாச தடுப்பு வழக்கும் பாயும் என்று கூறப்படுகிறது.பாலிவுட்டில் போதை மருந்து விவகாரத்தில் ஏற்கனவே ரியா சக்ரபோர்த்தி கைதாகி சிறையில் இருக்கிறார். நடிகைகள் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் ஆகியோர் மீது வழக்குப் பதிவாகி விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.