நவம்பர் 2ல் பள்ளிகள் திறப்பு ஆந்திர முதல்வர் அறிவிப்பு...!

ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த போது மாநில அரசுகள் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஆந்திராவில் பள்ளிகள் திறப்பது குறித்து, காணொலிக் காட்சி மூலம் அதிகாரிகளிடம் நேற்று மாலை ஆம் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காணொளி காட்சிகள் மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் :ஏற்கெனவே ஊரடங்குக்குப் பின்னர் அக்டோபர் 5ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் அன்றே மாணவர்களுக்கு 3 செட் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், காலுறைகள் , சாக்ஸ், பெல்ட், புத்தகப் பை ஆகியவற்றை வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பரவல் அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அதிகாரிகளுடனான ஆலோசனையில், பள்ளிகளை மீண்டும் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது எனவே முன்பே திட்டமிட்டபடி அக்டோபர் 5ம் தேதி மாணவர்களுக்குப் பாடப் புத்தகம் மற்றும் பள்ளி சார்ந்த உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

அதே சமயம் மேற்கு வங்கத்தில் பள்ளிக்கூடங்களைத் திறப்பது குறித்து நவம்பர் 14ஆம் தேதிக்கு பிறகுதான் பரிசீலனை செய்வோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. கரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. என்பதால் இன்னும் சில காலம் பொறுத்திருப்பதில் தவறு இல்லை. நவம்பர் 14 ஆம் தேதிதான் சிறப்பு மிக்க காளி பூஜை நடைபெற உள்ளது. அதன் பிறகே பள்ளிக்கூடங்களைத் திறப்பது குறித்துப் பரிசீலிக்க உள்ளோம் என்று மம்தா தெரிவித்திருக்கிறார்.

More News >>