ஜனாதிபதி, பிரதமர் சுற்றுப்பயணம் செல்ல தயாரான அதிநவீன விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.
இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல போயிங் 747 என்ற ஏர் இந்தியா விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்க நாட்டின் அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் வி.வி.ஐ.பி.ரக விமானங்களை போன்று இந்தியாவும் விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் கடந்த ஜனவரி மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது . இதன்படி அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இரண்டு போயிங் 777-300 ER ரக விமானங்களை போயிங் நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது.இந்நிலையில் இந்த இரு விமானங்களில் ஒரு விமானம் விவிஐபி 'ஏர் இந்தியா ஒன்'-ன் என்ற விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.
இந்த ஸ்பெஷல் ரக விமானத்தின் விலை ரூ.1400 கோடி ரூபாய். இதன் எடை 143 டன் . 43 000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம் . படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்ட எல்லா வசதிகளும் இந்த விமானத்தினுள் இருக்கின்றன. பிரம்மாண்டமான இந்த விமானத்தில் GE 90-115 BL என்ற அதிநவீன இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ரக எஞ்சின் உலகின் மிகப்பெரிய விமான எஞ்சின்களில் ஒன்றாகும் .
அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ம போயிங் ரக விமானத்தில் இருப்பதைப் போன்றே ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவச தொழில் நுட்பம் இந்த ரக விமானங்களிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அதிநவீன ஏர் இந்தியா ஒன் விமானத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் எந்த ஏவுகணை யாலும் இதை சுட்டு வீழ்த்த முடியாது. ஏவுகணைப் பாதுகாப்பு தொழில்நுட்பம் எனப்படும் அகச்சிவப்பு எதிர் நடவடிக்கைகள் என்ற தொழில்நுட்பம் மற்றும் எஸ் பி எஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகள் தொழில்நுட்பமும் இந்த விமானதில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இத்தகைய தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானங்கள் என்ற பெருமை இந்த ரக விமானங்களுக்கு சேரும் . இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டால், எதிரிகளின் ரேடார்களைச் செயலிழக்க செய்ய முடியும். இந்த விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை இடையில் எங்குமே நிறுத்தவேண்டிய அவசியமில்லாமல் தொடர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்தவையும் ஆகும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.