முடக்கத்தான் கீரையில் இட்லி ...உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது !!

முடக்கத்தான் கீரை நம் வீட்டுக்கு வெளியே உள்ள முட்புதர்களுள் வாழ்ந்து வரும்.எளிதே கிடைக்கும் கீரை எனவும் கூறலாம்..இதனில் அளவு கிடந்த நன்மைகள்,சத்துக்கள்ஆரோக்கியம் ஆகியவை நிறைந்துள்ளது.முடக்கத்தான் கீரையை அரைத்து மாவில் சேர்த்து இட்லியாகவோ அல்லது தோசையாகவோ சமைத்து சாப்பிடலாம்.இந்த கீரை சளி,வரட்டு இருமல் ஆகியவையில் இருந்து நிவாரணம் பெறலாம்.சரி வாங்க முடக்கத்தான் கீரையில் தோசை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்...தேவையான பொருள்கள்:-இட்லி அரிசி-1 கப் உளுத்தம் பருப்பு-3/4 கப் வெந்தயம்-3 ஸ்பூன் முடக்கத்தான் கீரை-தேவையான அளவு உப்பு-தேவையான அளவு வாழை இலை-1நல்லெண்ணெய்-1 ஸ்பூன்

செய்முறை:-முதலில் அரிசி,உளுத்தம் பருப்பு,வெந்தயம் ஆகிய பொருள்களை 5 மணி நேரம் ஊறவைக்கவும்.ஊறிய பொருளை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.அரைக்கும் பொருளோடு முடக்கத்தான் கீரையும் வைத்து பதமாக அரைத்து கொள்ளவும்.இட்லி பாத்திரத்தில் வாழை இலையை வைத்து அதன் மேல் அரைத்த மாவை ஊற்ற வேண்டும்.15 நிமிடம் இட்லியை வேக விடவும்.15 நிமிடம் கழித்த பிறகு சூடான,சுவையான,ஆரோக்கியமான முடக்கத்தான் இட்லி தயார்...

More News >>