நாட்டின் முதல் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. நெய்வேலி மக்கள் உணர்ச்சி பொங்க பிரியாவிடை.

இந்தியாவில் முதன் முதலாக நெய்வேலியில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது .

1962ஆம் ஆண்டு நெய்வேலியல் தொடங்கப்பட்ட இந்த அனல் மின் நிலையம்-1 ஆயுட்காலம் நிறைவடைந்ததால் நிரந்தரமாக மூ டப்பட்டது.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி படிமம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதை முதன்மையான எரிபொருளாக கொண்டு இயங்கக்கூடிய, அனல்மின் நிலையம் நெய்வேலியில் அமைக்கப்பட்டது. இதுதான் தெற்காசியாவில் அமைந்த முதல் மற்றும் ஒரே அனல்மின் நிலையமாகும். சோவியத் நாட்டின் கூட்டு முயற்சியுடன் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இந்த அனல்மின் நிலையம் உருவானது. தலா 50 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 6 யூனிட்கள், 100 மெகா வாட் உற்பத்தித் திறன்கொண்ட 3யூனிட்கள் என மொத்தம் 9 யூனிட்களுடன் இந்த அனல் மின் நிலையம் துவக்கப்பட்டது.

\

1962ம் ஆண்டு முதல் 1970 வரையில் எட்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக மொத்தம் 77.81 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் துவக்கப்பட்டது. . 23.05.1962 இல் முதலாவது யூனிட்டும், 21.02.1970 இல், கடைசி யூனிட்டான 9 வது யூனிட்டும், மின் பகிர்மானத்துடன் ஒருங்கிணைக்கப் பட்டது. 1962 ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதலாவது யூனிட்டை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இம்மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதும், ஒரே பயனாளரான, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்தது.இம்மின் நிலையத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்டு வரும் நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தின் முதலாம் யூனிட், வணிகரீதியிலான மின்உற்பத்தியை சமீபத்தில் துவங்கியதை அடுத்து, 2020ம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் முதலாம் அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தியை படிப்படியாக நிறுத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில், ஒவ்வொரு யூனிட் களின் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 30 ம் தேதி மாலை 4 மணிக்கு, , 6வது யூனிட்டில் இறுதியாக மேற்கொள்ளப்பட்டு வந்த மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டு, முதலாவது அனல்மின் நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது.

இம்மின்நிலையம் செயல்படத் தொடங்கியதிலிருந்து 32,66,140 மணி நேரம் இயங்கி 1,85.390 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இதன் கொதிகலன்கள், டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் இப்போது ஓசையின்றி அமைதியாகி விட்டது. இதுவரை திறம்பட மின்உற்பத்தி செய்துவந்த தாய் அனல் மின் நிலைய திற்கு, என்எல்சி இந்தியா நிறுவனமும் மற்றும் அதன் ஊழியர்களும் உணர்ச்சி பொங்க பிரியாவிடை கொடுத்துள்ளனர்.57 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிட்டனர். ஆனால் தற்போது பாதுகாப்பு கருதி பார்வையிட முடியாத நிலை இருந்து வருகிறது.தற்போது மூடப்பட் டுவிட்டதால் அனல் மின்நிலையத்தை பற்றி மாணவர் கள் தெரிந்து கொள்ளவும் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் என்எல்சி நிறுவனம் இதை பாதுகாத்து வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

உலகத்திலேயே அதிக நாள் இயங்கிய பெருமையும் இந்த முதல் அனல்மின் நிலையத்திற்குத்தான் என்பது சொல்லியே ஆக வேண்டிய விஷயம்.

More News >>