கூகுள் பிக்ஸல் 4ஏ ஸ்மார்ட்போன்: அக்டோபர் 17 முதல் விற்பனை..!

குரலைப் பதிவு செய்து ஆங்கிலத்தில் உரைவடிவமாக மாற்றும் ரெகார்டர் செயலி மற்றும் விரைவில் குறுஞ்செய்திகளை அனுப்ப வசதியாகக் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியுடன் பிக்ஸல் 4ஏ ஸ்மார்ட் போன் அறிமுகமாக உள்ளது. கூடுதலாக, நேரடியாகத் தலைப்பு வழங்கக்கூடிய (Live Caption) வசதியும் இதில் இருக்கும்.

பிக்ஸல் 3ஏ ஸ்மார்ட் போன் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த வடிவமாக ஆகஸ்ட் மாதம் பிக்ஸல் 4ஏ அறிமுகமானது. தற்போது இது இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

கூகுள் பிக்ஸல் 4ஏ சிறப்பம்சங்கள்:

தொடுதிரை : 5.81 அங்குலம்; எஃப்எச்டி+ 1080X2340 தரம்; OLED வகைமுன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல் (எஃப்/2.0 லென்ஸ்)பின்புற காமிரா: 12.2 எம்பி ஆற்றல் (எஃப்/1.7 லென்ஸ்; ஓஐஎஸ் வசதியுடன்) இயக்கவேகம் : 6 ஜிபிசேமிப்பளவு : 128 ஜிபி (இதை அதிகரிக்கும் வசதி இல்லை)இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10பிராசஸர் : ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 730ஜிமின்கலம் (பேட்டரி) : 3140 mAhஎடை : 143 கிராம்

4ஜி வோல்ட், வைஃபை 802.11 ac, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி இவற்றுடன் ஆக்ஸலரோமீட்டர், பாரோமீட்டர், மாக்னடோமீட்டர் மற்றும் பின்புறம் விரல் ரேகை உணரி, பிராக்ஸிமிட்டி சென்ஸார் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டது.

அக்டோபர் 17ம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாக இருக்கும் கூகுள் பிக்ஸல் 4ஏ ஸ்மார்ட்போனுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் விற்பனையாகும் விலையோடு ஒப்பிட்டால் இந்தியாவில் ரூ.25,000/- மேல் விற்பனை விலை நிர்ணயிக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.

More News >>