இதயங்களை வென்றது, சஹால் பகிர்ந்த புன்னகை புகைப்படம்..!
வருங்கால மனைவியுடன் தாம் இருக்கும் புகைப்படத்தை சஹல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது இணைய உலகில் இனிமை கலந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது.ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிவருகிறார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல். அவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் தனஸ்ரீ வெர்மா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தனஸ்ரீ, இணையவழி படைப்பாளராக (ஆன்லைன் காண்டென்ட் கிரியேட்டர்) பணிபுரிகிறார்.
தனஸ்ரீயும் தாமும் மாடிப்படியில் இருக்கும் புகைப்படத்தை சஹல் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "நீ எனக்குத் தந்த புன்னகையை அணிந்துள்ளேன்" என்று அதற்குத் தலைப்பிட்டுள்ளார். அதற்கு தனஸ்ரீ, "வரவேற்கிறேன்" என்றும் "எப்போதும் சிரித்துக்கொண்டே இருங்கள்" என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு இணைய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தனக்குத் திருமணம் நிச்சயமான செய்தியை ஆகஸ்ட் மாதம் சஹல், இன்ஸ்டாகிராமில்தான் அறிவித்திருந்தார். "எங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நாங்களும் 'ஆம்' என்று இசைந்துள்ளோம்" என்று அப்போது அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் சஹல் இதுவரை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தினார். அடுத்ததாக அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட இருக்கிறார்.