நடிகை பாலியல் புகாரால் போலீஸ் ஸ்டேஷன் வந்த இயக்குனர்.. அதிரடியாக பதில் சொல்லி திணற வைத்தார்..
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தியில் லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட மாறுபட்ட படங்கள் இயக்கியவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இந்நிலையில் நடிகை பாயல் கோஷ் கடந்த வாரம் தன் மீது நடந்த பாலியல் வன்முறை குறித்துப் பரபரப்பாகத் தகவல் வெளியிட்டார். இயக்குனர் அனுராக் காஷ்யப் தனக்குப் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக வீட்டுக்கு அழைத்தார்.
அப்போது என்னிடம் பேசிக்கொண்டே இருந்த நிலையில் என்னை ஷோபாவில் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் அவரை பிடித்துத் தள்ளிவிட்டுத் தப்பி வந்தேன் என்றார். இதை அனுராக் மறுத்திருந்தார். மேலும் நடிகைகள் ராதிகா ஆப்தே, டாப்ஸி உள்ளிட்ட சில நடிகைகள் அனுராக் காஷ்யப் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் பெண்கள் முன்னேற்றத்துக்காக குரல் கொடுப்பவர் என்று ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து பாயல் கோஷ் மும்பை வெர்சோவா காவல் நிலையம் சென்று அனுராக் மீது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகப் புகார் அளித்தார். மேலும் மத்திய மந்திரி ராம் தாஸை சந்தித்தும் புகார் அளித்து அனுராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதன்பிறகு கவர்னரிடமும் முறையிட்டார். இந்நிலையில் வெர்சோவா போலீஸார் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை விசாரணைக்கு ஆஜராகும்படி அழைத்தனர். அதனை ஏற்று வெர்சோ வா போலீஸ் நிலையத்தில் அனுராக் காஷ்யப் நேற்று ஆஜரானார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அனுராக் காஷ்யப் தன் மீது நடிகை சொன்ன எல்லா புகார்களையும் மறுத்தார். பின்னர் அனுராக் வழக்கறிஞர் பிரியங்கா கூறும்போது, இயக்குனர் மீது நடிகை பாலியல் கொடுமை செய்தாக நடிகை சொன்ன ஆண்டில் அனுராக் ஷுட்டிங்கிற்காக இலங்கை நாட்டில் இருந்தார். அதற்கான ஆதாரம் அளித்திருக்கிறோம். இயக்குனர் மீது பொய்யான புகார் கூறப்பட்டிருக்கிறது என்றார். அனுராக் காஷ்யப் வழக்கறிஞர் சொல்லியிருக்கும் தகவல் பலரையும் திணறடித்துள்ளது.