ரஜினியின் 2.0 திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் - ஆமிர்கான்
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வரவுள்ள 2.0 திரைப்படம் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர்கான் கூறியுள்ளார்.
இதுவரை இந்திய சினிமா வசூல் சாதனையில் ஆமிர்கான் நடித்த திரைப்படங்களே சாதனை புரிந்து வந்துள்ளது. குறிப்பாக அவரது வசூல் சாதனையை அவரே முறியடிப்பார். 3 இடியட்ஸ், தூம் 3, பீகே, தங்கல் என அவரே சாதனை மன்னனாக இருந்து வருகிறார். இந்நிலையில், இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் 2.0 முறியடிக்கும் என்று ஆமிர்கான் கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேடிய அவர், “திரு ரஜினிகாந்த அவர்கள் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தன்னையே வருத்தி நடித்துள்ளார். மேலும், இயக்குநர் சங்கர் எனக்கான ஸ்கிரிப்ட் தயார் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். நான் இவர்கள் இருவருடைய தீவிர ரசிகன்” என்றார்.
மேலும், “நான் அதன் முதல் பகுதியை [எந்திரன்] பார்த்தேன். ரஜினிகாந்த் நடித்த ரோலில் நான் நடிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 2.0 அருமையான கதை. அதை திரைப்படமாக மாற்ற நினைத்ததே கடினமான முடிவுதான். இந்த திரைப்படம் சினிமா உலகின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.