பிரபல நடிகர் எழுதிய ஸ்கிரிப்ட்டில் களவாணி நடிகர் ஹீரோ..

பல படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் விஜய் சேதுபதி ரஜினிக்கு பேட்ட படத்திலும், விஜய்க்கு மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். அவர் தற்போது புதிய படமொன்றுக்குக் கதை வசனம் திரைக்கதை என முழு ஸ்கிரிபட்டும் எழுதி இருக்கிறார். இதில் களவாணி பட ஹீரோ விமல் நாயகனாக நடிக்கிறார்.

ஏற்கனவே விமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து', இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக் காரி', தர்ம பிரபு இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கன்னிராசி' ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த "படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படங்களை விரைவாக முடித்துக் கொடுத்து விட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் 'குலசாமி' என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர் சுராஜ் உதவியாளர் ராஜதுரை இயக்கத்தில் 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற படத்திலும் நடிக்கத் தயாராகி வருகிறார் விமல். 'குலசாமி' படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'குலசாமி' படத்தின் படப் பிடிப்பு இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது.

More News >>