இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வுக்கு இணையதளம் மூலம் பயிற்சி !
தமிழ்நாடு, சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், இரண்டாம் நிலை போலீசார், சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றில், 10 ஆயிரத்து, 906 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு தேர்வு குழுமம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். October 26 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத்தேர்வு, டிச., 13ல் நடக்கிறது.
இப்போட்டி தேர்வுக்கு, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம், ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பு October 5.ல் துவங்குகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், இலவச ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்கலாம். அதில் சேர விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தங்கள் விபரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 04342-296188 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இலவச ஆன்லைன் வகுப்பில் ஆண், பெண், திருநங்கைகள் எனப் பலரும் சேரலாம்.
விண்ணப்பிக்கக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxEMtqr1UV0wX5OwTzaQaaXOXW0mqLgxKapLnd5kwabEFfNw/viewform