ராம ராஜ்ய ரத யாத்திரை மாற்றுப்பாதையில் சென்றதால் பரபரப்பு

கேரளாவில் இருந்து புறப்பட்ட ராம ராஜ்ய ரத யாத்திரை ராமேஸ்வரத்தில் மாற்றுப் பாதையில் சென்றதால் போலீசார் அதனை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அயோத்தில், ராமர்கோவில் கட்டுவதற்காக ஆதரவு திரட்டும் வகையில், ராம ராஜ்ஜிய ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அயோத்தில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்களைக் கடந்து கேரளாவில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தது. தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளையும் மீறி ரத யாத்திரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் இருந்து புறப்பட்ட யாத்திரை இன்று ராமேஸ்வரம் மாவட்டம் சென்றடைந்தது. அப்போது, ரத யாத்திரை அனுமதிக்கப்பட்ட வழியில் செல்லாமல் தேவிபட்டினம் வழியாக செல்ல முயன்றது. இதை அறிந்த போலீசார் உடனே ரத யாத்திரையை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, ரதத்துடன் வந்த பாஜக நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், அனுமதிக்கப்பட்ட பாதையான கிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி நோக்கி ரத யாத்திரை சென்றது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>