11 பேருக்கு ஆயுள் - மாட்டுக்கறி விவகாரத்தில் முஸ்லிம் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி

மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி முஸ்லீம் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராம்கார் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பீஹார் மாநிலத்தில் ஜார்கண்ட் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறைச்சி வியாபாரம் செய்திடும் அலிமுதீன் அன்சாரி என்னும் முஸ்லிம் தன் காரில் மாட்டுக்கறி கொண்டு சென்றார். என்று கூறி பசுப்பாதுகாப்புக் குழு என்கிற பெயரில் செயல்பட்ட இந்துத்துவா மதவெறியர்களால் கொல்லப்பட்டார். அவரது காரும் எரித்து சாம்பலாக்கப்பட்டது.

இந்த வழக்கில், ராம்கார் மாவட்ட விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர்களில் 11 பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறினார். வயது நிறைவடையாத ஒருவருக்கு மட்டும் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதுவரை நாடு முழுதும் 2010க்கும் 2017க்கும் இடையே, இவ்வாறு கொல்லப்பட்ட 28 பேர்களில் 24 பேர் முஸ்லீம்கள். இதில் நாட்டிலேயே முதன்முறையாக இப்போதுதான் மத வெறியர்களுக்கு எதிராக, இத்தகைய செயலை ஒரு திட்டமிட்ட சதி என்று ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>