சினிமாவில் வருமானமில்லாததால் சமையல் வேலை செய்யும் நடிகை...
கொரோனா ஊரடங்கு எப்படியெல்லாம் எல்லோருடைய வாழ்கையையும் மாற்றியிருக்கிறது என்று ஒரு பட்டியலிட்டால் அந்த பட்டியலிருந்து யாருமே தப்ப முடியாது. சினிமா பிரபலங்கள் பலர் பவுசாக இருப்பது போல் தெரிந்தாலும் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். வளரும் நடிகர், நடிகைகளின் வாழ்க்கை.
துணை நடிகர்களின் வாழ்க்கை அவர்களின் கையைவிட்டே போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும் சில துணை நடிகர்கள், டிவி நட்சத்திரங்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி கடையும் இன்னும் சிலர் மீன் விற்கவும் சென்று விட்டார்கள். தற்போது ஒரு தமிழ் நடிகை சமையல் வேலை செய்துக் கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய வாழ்க்கைச் சக்கரம் என்ற படத்தில் அறிமுகமானவர் பிருந்தா. மேலும் பல்வேறு படங்கள் மற்றும் சில டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மலேசியா சென்ற பிருந்தா அங்கு சமையல் செய்யப் பழகினார். தற்போது அது அவருக்குக் கை கொடுத்திருக்கிறது.மலேசியாவில் கொரோனா தொற்று அதிகமானதால் சென்னை திரும்பியுள்ளார். மலேசிய உணவுகளை இங்குத் தயாரித்து தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக சினிமா பிரபலங்களுக்கு விற்கிறார். அதில் வரும் வருமானம் பார்ப்பதால் சிக்கல் இல்லாமல் வாழ்க்கை நகர்கிறதாம். சென்னை வந்தவருக்குச் சீக்கிரமே டிவியில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்திருக்கிறதாம்.