திருமணத்திற்கு தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண்ணை நாசப்படுத்திய சோதிடர்

திருமணத்திற்கு தடையாக உள்ள தோஷத்தை நிவர்த்தி செய்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தாரமங்கலம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் பன்னீர்செல்வம் அப்பகுதியில், ஜோதிடம் பார்த்து வருகிறார். பன்னீர்செல்வம் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே பல பெண்கள், தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்துள்ளனர். இதனால், தாரமங்கலம் காவல் துறையினர், கடந்த ஒரு மாதமாக பன்னீர்செல்வத்தை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று பன்னீர்செல்வம், தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த ஒரு இளம்பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும், அதனால் தான் திருமணம் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், திருமணத்திற்கு முன்பாக தோஷம் கழிக்க வேண்டும் என கூறி அந்த பெண்ணை தனி அறைக்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ய பன்னீர்செல்வம் முயற்சி செய்துள்ளார்.

ஏற்கனவே, கண்காணித்து வந்த காவல் துறையினர் பன்னீர்செல்வத்தின் அறைக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர். மேலும், மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>