சேலையில் வித்யா பாலனை அடிச்சிக்க ஆளே இல்லை விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் புதிய மாடல் சேலை அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோ வைரலாக பரவி வருகிறது.பாலிவுட்டில் மிகவும் அழகாகச் சேலை அணியும் நடிகை யார் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில்தான் வரும். அவர் தான் வித்யாபாலன். பெரும்பாலும் சினிமா உள்பட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வித்யா பாலன் சேலையில் தான் வலம் வருவார். மாடர்ன் டிரஸ்சில் இவரைப் பார்ப்பது மிகவும் அரிதாகும். இவரது சேலை அணியும் அழகைப் பாலிவுட்டில் புகழாதவர்களே யாரும் இல்லை என்று கூறலாம்.
இந்நிலையில் புதிய ஒரு மாடல் சேலை அணிந்த தன்னுடைய சில போட்டோக்களை வித்யா பாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கறுப்பு நிறமுள்ள பிரின்டட் பட்டுச் சேலை அணிந்த இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பிரசித்தி பெற்ற ஜேஜே வலயா டிசைனர் ஹவுசின் புதிய தயாரிப்பு தான் இந்த சேலை. இதற்கு மேட்சாக கழுத்துடன் சேர்ந்த இறுக்கமான அதே கறுப்பு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் பிளவுசும் அணிந்துள்ளார். அதனுடன் இடுப்பில் ஒரு பெல்ட்டும் சேர்ந்திருப்பதால் இது ஒரு வித்தியாசமான சேலையாக மாறியுள்ளது. கோல்டன் நிறத்தில் பார்டரும், கறுப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ள பிரின்டும் இந்த சேலையை மிகவும் அழகாக மாற்றியுள்ளது.
இதுதவிர சேலையுடன் வித்யா அணிந்துள்ள சில நகைகளும் அழகுக்கு அழகு சேர்க்கிறது. அதுமட்டுமில்லாமல் சிகை அலங்காரத்திலும் இவர் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்துள்ளார். இவை எல்லாம் சேர்ந்து இந்த புதிய மாடல் சேலையில் வித்யா பாலன் ஒரு வித்தியாசமான பாலனாக மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த போட்டோக்கள் வெளியான உடனே அந்த சேலைக்கு என்ன விலை இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். அதற்கான விடையையும் அவர்களே கண்டுபிடித்து விட்டனர். ஜேஜே வலயாவின் இணையதளத்திற்குச் சென்று அந்த சேலைக்கான விலையை ரசிகர்களே கண்டு பிடித்துவிட்டனர். அதிகமில்லை வெறும் 99 ஆயிரம் ரூபாய் மட்டும் தான்.