உலகின் முதல் சைவ நகரம்..சில ருசிகர தகவல்கள்.
அசைவம் சாப்பிடாதவர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு நகரமே அசைவம் சாப்பிடாமல் சைவமாக இருக்க முடியுமா? இருக்கிறது அதுவும் இந்தியாவில்உணவுக்காக பிராணிகளை கொல்வது பாவச்செயல் என்பதால் ஒரு நகரில் சைவ த்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. படுகிறது. இத்தகைய பெருமைக்குரிய நகரம் பாலிதானா குஜராத் மாநிலத்தில் இருக்கிறது. இந்த சிறிய நகரத்தில் ஜெயின் சமூகத்தினர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரில் விடுதலை விட சமண மதக் கோவில்கள் தான் அதிகம் அமைந்துள்ளது. இந்த மலை நகரில் 900 கோவில்கள் இருக்கிறது என்றால் வியப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. எனவேதான் இதை கோவில் நகரம் என்றும் அழைக்கிறார்கள்.
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பாலிதானா நகரம். சமண மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த நகரம் ஒரு புனித தலமாக கருதப்படுகிறது. சமணர்களால் தூய்மையான மற்றும் மிகவும் மதிக்கத்தக்க இடமாக இந்த நகரம் உள்ளது. உணவிற்காக பிராணிகளை கொல்வது இங்கே முற்றிலும் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது. முட்டை அல்லது இறைச்சி விற்பனை செய்வது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த சைவ நகரம் உலகின் 900 கோயில்களைக் கொண்ட ஒரே மலை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.மலையும் கோயில்களும் சமணர்களைப் பொறுத்தவரை மதக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும். இது சமண சமூகத்தின் மிகவும் புனித யாத்திரை தலமாகும், உலகின் மிகப்பெரிய கோயில் வளாகமாகவும் இந்த நகரம் கருதப்படுகிறது. உலகிலேயே ஒரு மலையில் அதிக கோவில்களை கொண்ட நகரம் என்ற பெருமையும் இந்த நகருக்கு உண்டு. நீங்கள் அசைவத்தை விரும்புபவர்கள் என்றால், இந்த இடம் உங்களுக்கு ஏற்றது இல்லை. ஆனால் ஒரு முழுமையான சைவ உணவு உண்பவராக நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், இந்த நகருக்கு வந்து நாட்களை செலவிடலாம் என்கிறார்கள்.
கடந்த 2014 ல், உணவிற்காக பிராணிகளை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்படி கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 200 ஜெயின் துறவிகள் இந்த நகரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். ஒரு இறைச்சிக் கடை கூட இங்கே இருக்க கூடாது என்பதும் அவர்களது கோரிக்கையாக இருந்தது. இதை இறைச்சியில் அது மண்டலமாக அறிவித்தது. இதன் பிறகு எங்கு இருந்த 250 இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு காணாமல் போய்விட்டன. அதன்பிறகு பாலிதானா நகரம் உலகின் முதல் சைவ நகரமாக பெயர் பெற்றது.
நீண்ட பாரம்பரியம், கலாச்சாரம் கொண்ட நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. இந்தியர்கள் உலகின் பல பகுதிகளில் வசித்து வந்தாலும் அவர்களது பழக்க வழக்கங்கள் கலாச்சாரங்கள் அவர்களை மற்ற பகுதிகளில் இருந்து தனித்து அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சமண மதத்தினர் சுமார் ஒரு கோடி பேர் மட்டுமே உள்ளனர். சமண மதம், பாரம்பரியமாக சமண தர்மம் என்று அழைக்கப்படுகிறது, மனிதர்களைப் போலவே விலங்குகள் மற்றும் தாவரங்களும் உயிருள்ள ஆத்மாக்களைக் கொண்டுள்ளன என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் சம மதிப்பாகக் கருதப்படுகின்றன, அவை மரியாதையுடனும் கருணையுடனும் நடத்தப்பட வேண்டும். சமண மதத்தின் சாராம்சம். எனவேதான், சமணர்கள் கண்டிப்பாக சைவ உணவைப் பின்பற்றுகிறார்கள்.
அந்த அகிம்சை கொள்கையை ஏற்று தான் அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற சைவ நகரை உருவாக்க அனுமதி அளித்திருக்கிறது அரசு .