சுண்டைக்காயில் இவ்வளவு மருத்துவ பயன்களா ??

சுண்டைக்காய் அளவில் வேண்டுமென்றால் சிறியதாக இருக்கலாம். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் மிகவும் பெரியது. உடலின் பல நோய்களுக்கும் சுண்டக்காய் மருந்தாக பயன்படுகிறது. சரி, இவற்றை குறித்து கீழே பார்ப்போம்..

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.

முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.

உடற்சோர்வு நீங்கும். இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. வாயுப் பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.

இதையும் படிங்க: தாய்ப்பால் சுரக்கும், வாய் துர்நாற்றம் நீக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும் - வெற்றிலையின் மருத்துவ பயன்கள்...!

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

More News >>