பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது: பாஜக., எம்எல்ஏ, சர்ச்சை பேச்சு
லக்னோ: அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்களை தடுக்க முடியாது என பாஜக எம்எல்ஏ., சுரேந்திரசிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில், சமீபத்தில், தலித் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.கடும் பாலியல் தாக்குதலுக்கு ஆளான அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவசர அவசரமாக நள்ளிரவில், அவரது உடலை போலீசார் எரியூட்டினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்து பாஜக, எம்எல்ஏ., ஒருவர் சர்ச்சை கருத்தை பேசியுள்ளார்.
மேலும் இன்று 4 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.