“கலக்கப்போவது யாரு முதல் கஜா புயல் வரை ” ...பிக் பாஸ் இல் கலந்துகொள்ளும் நிஷா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!

விஜய் டிவியில் நடைபெற இருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கான அறிமுக நாள் இன்று ( அக்டோபர் 4) இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருபவர் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும், இந்திய சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உலக அளவில் பதியவைத்த உலக நாயகன் "கமல்ஹாசன்".

இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா இன்று நடைபெறவுள்ளது. இதில் யார்? யார்? போட்டியாளர்களாக பங்கு பெற இருக்கிறார்கள் என்ற விவரங்கள் இன்று மாலை தெரிந்துவிடும். இதுவரை யாரெல்லாம் போட்டியில் பங்கேற்பார்கள் என்று கசிந்த விவரங்கள்தான் இணையத்தில் வலம் வந்துக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் மேடைப் பேச்சாளரும், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் அடையாளம் பெற்றவருமான " அறந்தாங்கி நிஷா" பெயரும் அடிபடுகிறது. இவரை விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்‌. இதன் மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் இவர் தன்னை விஜய் டிவியின் " நயன்தாரா" என்று செல்லமாக இவரே அழைத்துக் கொள்கிறார்.

நிஷா பார்ப்பதற்கு நாற்பது வயதைக் கடந்தவர் போன்று தெரியலாம். அதற்கு அவரது உடலமைப்பு ஒரு காரணம். ஆனால் உண்மை என்னவென்றால் அவருக்கு 31 வயது முடிந்து 32 வயதுதான் ஆகிறது. அவர் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தான் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் இவர் நுழைந்து விட்டால் இவரின் பிறந்தநாளுக்கு "கமல்ஹாசன்" இடமிருந்து வாழ்த்து பெறும் வாய்ப்பு இந்தாண்டு இவருக்கு கிடைக்கலாம்.

அவருடைய கள்ளம் கபடமில்லாத பேச்சும் செயல்பாடுகளும் ஏதோ பள்ளியிலேயே படிப்பை கைவிட்டு விட்ட, கிராமத்து பெண் போன்று தான் தோற்றமளிக்கும். ஆனால் அவர் புதுக்கோட்டையில் உள்ள ஜே.ஜே கலை கல்லூரியில் தான் 2008-2011 ல் பட்டம் படித்து முடித்தார்.

நிஷா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே ரியாஸ் அலி என்பவருடன் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 10 நாள் திருமணம் முடித்து வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அவரே நிஷாவின் எல்லா செயல்களுக்கும் ஊக்கம் கொடுத்து உடன் நிற்கிறார். ரியாஸ் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகப் பணியாளர். மேலும் இவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தது. இதனை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

நிஷாவின் கலகல பேச்சும், வெகுளித்தனத்தையும் போல தன் சார்ந்த துயரங்களையும் பாடலில் வெளிபடுத்தியிருக்கிறார் நிஷா. கஜா புயல் வட மாவட்டங்களை ஒரு புரட்டு புரட்டிப் போட்ட போது, பேஸ்புக் வழியாக நிஷா ஓடி ஓடி உதவியது, தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்ததை நாம் எல்லோருமே பேஸ்புக் வழியாகப் பார்த்தோம். அதேபோல் கஜா புயலைப் பற்றியும் அதனால் மக்கள் அடைந்த அத்தனை பிரச்சினைகளையும் பற்றி நம்முடைய உயிர் உருக்கும் அளவுக்கு ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த பாதிக்கப்பட்ட மண்ணைச் சேர்ந்தவர் என்பதால் இன்னும் கூடுதல் ஆழம் அந்த பாடலில் இருக்கிறது.

டீவி ஷோக்களை தொடர்ந்து இவருக்கு, மாரி2 வில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதனை சரியாக பயன்படுத்தி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார் நிஷா. இதற்கு முன்பாக சமுத்திரகனி நடித்த ஆண்தேவதை படத்தில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிஷாவின் வெற்றிக்கு தி சப் எடிட்டர் டாட் காம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

More News >>