கொரோனா தொடாத அதிசய கிராமம்! தமிழ்நாட்டில் எங்குள்ளது தெரியுமா?

இந்தியாவில் கொரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம், கொரோனா தொடமுடியாத ஆரோக்கிய சூழலை கொண்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை அடுத்துள்ள அந்தக் கிராமத்தில் 103 குடும்பங்கள் உள்ளன. மொத்தம் 550 பேர் வசிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் ரப்பர் எஸ்டேட்களில் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்கள் பிள்ளைகள் தொலைதூரத்தில் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அவர்களும் இக்கிராமத்தில் இருக்கின்றனர்.

நாகர்கோவிலிருந்து ஏறத்தாழ 30 கி.மீ. தொலைவில் உள்ள இக்கிராமத்தின் பெயர் கீரிப்பாறை. இது தோவாளை வட்டாரத்தை சேர்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே கொரோனா பாதிப்பு இருந்தும் இக்கிராமத்தை நோய் அண்டவில்லை.

அவசியம் ஏற்பட்டாலொழிய கிராமத்தை விட்டு இம்மக்கள் வெளியே வருவதில்லை. சுற்றுசூழல் ஆரோக்கியமானதாக இருப்பதால் இக்கிராமத்தில் பெரும்பாலானோருக்கு இதுவரை காய்ச்சல் போன்ற சாதாரண உடல்நல குறைவுகள் கூட வந்ததில்லை என்று கூறப்படுகிறது. காற்றும், தண்ணீரும் சுத்தமாக இருப்பதால் மக்களும் ஆரோக்கியமாக உள்ளனர். இங்கு வரும் தண்ணீர் மூலிகைகள் வழியாக பாய்ந்து வருவதால் அதிலும் மருத்துவகுணங்கள் இருப்பதாக அங்கு வசிப்போர் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமத்திற்கு வரும் அதிகாரிகள் மூலமாகவே கொரோனா பற்றி கீரிப்பாறை மக்களுக்கு தெரிய வந்துள்ளது. கிராமத்தைவிட்டு வெளியே வருவதில்லை என்பதால் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவையும் தேவையில்லாத நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

More News >>