கொரோனாவுக்கு பிரபல நடிகையும் தப்பவில்லை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு..
கொரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். உடற்பயிற்சி வீட்டு வேலை, சமையல் வேலை என தங்களை பிஸியாக வைத்துக்கொண்டனர். நன்றாக போய்க்கொண்டிருந்த ஸ்டார்களின் வீட்டுக்குள்ளும் கொரோனா வைரஸ் நுழைந்தது.
அமிதாப்பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, விஷால் என பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தனர்.கடந்த 2 மாதத்துக்கு முன் நடிகை தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தமன்னா உள்ளிட்ட மற்றவர்களுக்கு டெஸ்ட் எடுத்ததில் கொரோனா நெகடிவ் என கூறப்பட்டது. படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கிய நிலையில் தமன்னாவும் ஷூட்டிங் செல்வதற்கான ஆயத்த பணிகளில் இருந்ததுடன் ஐதராபாத்தில் நடந்த வெப் சிரீஸில் நடிக்க வந்தார். இந்த நேரத்தில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அறிகுறி தென்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமன்னாவுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது ரசிகர்கள் தமன்னா விரைந்து குணம் அடைய பிரார்த்தனை செய்வதாக மெசேஜ் பகிர்ந்து வருகின்றனர்.